சிறுவர்களிடையே பரவும் வைரஸ் – அறிகுறிகள் தென்பட்டால் அவதானமாக செயற்படுமாறு சுகாதார திணைக்களம் அவசர அறிவுறுத்து!
Monday, June 17th, 2024
இன்ஃபுளுவென்சா வைரஸ் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் சுவாசக் குழாயைப் பாதிப்பதன் காரணமாக காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, இருமல், சோர்வு போன்ற அறிகுறிகள் சிறுவர்களிடையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்ஃபுளுவென்சா வைரஸ் எளிதில் பரவும் திறன் கொண்டதால் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகபட்ச கடன் – அமைச்சர் நாமலின் யோசனைக்கு அமைச்சர...
இலங்கையில் மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு - டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் எச்சரிக்கை...
|
|
|


