சிறப்புற நடைபெற்ற வட்டு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல்!

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்க ஒன்றுகூடல் நேற்றையதினம் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு கல்லூரியின் அதிபரும் பழையமாணவர் சங்க தலைவருமான தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. குறித்த ஒன்றுகூடலில் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் மாணவர்களது நலன்கள் தொடர்பாக ஆராய்ந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவனும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அபிவிருத்தியை பெற மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும்! - வடக்கு ஆளுநர்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள்!
நாடாளுமன்றை அச்சுறுத்தும் கோரோனா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை!
|
|