நிலத்தடி நீரில் ஒயில் விவகாரம் புதிய சுற்றறிக்கை நடைமுறையினால் நீர் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும்!

Friday, January 20th, 2017

நிலத்தடி நீரில் உள்ள எண்ணெயின் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு இன்றுவரை இரு வேறுபட்ட நிலையில் காணப்படுகிறது. புதிய சுற்றறிக்கை நடைமுறைக்கு வந்தால் நீர் விநியோகம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்படலாம். என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தண்ணீரில் ஒயில் கலந்த விவகாரமே பெரிய விடயமாகவும் பேசப்பட்டது.

தண்ணீரில் உள்ள எண்ணெயின் அளவு தொடர்பில் இறுதியாக 2014ஆம் ஆண்டில்தான் சுற்றறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. சுகதார அமைச்சின் சுற்றறிக்கையின் படி தண்ணீரில் உள்ள எண்ணெயின் அளவு 2 மி;லிகிராம் என்றும் இலங்கை தர நிர்ணய சபையின் சுற்றறிக்கையின்படி 0.2 மில்லிகிராம் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்த விவகாரம் நீதிமன்றில் வழக்காக உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே தண்ணீர் விநியோகம் இடம்பெறுகிறது. கடந்த தவணை நீதிமன்றில் முன்னிலையான சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் அதிகாரி, தண்ணீரில் உள்ள எண்ணையின் அளவை 0.2 மில்லிகிராமாக மாற்றவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போதைய வறட்சியில் தண்ணீர் விநியோகம் சிக்கலாகியுள்ள நிலையில் தண்ணீரில் உள்ள எண்ணெயின் அளவை 0.2 மில்லிகிரமாக மாற்றப்படும் போது தண்ணீர் விநியோகம் சிக்கலாகும் என்று தெரிவிக்கப்பட்டது. நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்படி 0.2 என்ற அளவைப் பின்பற்றுகிறோம். ஆனால் அது குழாய்வழி மூலமான விநியோகத்தில்தான். சுன்னாகம் உள்ளிட்ட பல இடங்களில் தாம் வழங்கும் தண்ணீரைப் பொதுமக்கள் வீணடிப்பதையும் கண்டதாக யாழ். நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் பொறியியலாளர் ஏ.ஜெகதீசன் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

16128290_1297473590291725_1518065730_n

Related posts: