நடைமுறை சாத்தியமான ரீதியில் உரிமைகளை பெற்றுத்தரும் வல்லமை தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமே உண்டு – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் றெமீடியஸ்!

Friday, June 26th, 2020

தமிழ் மக்கள் தமது உரிமைகளையும் அடையாளங்களையும் பாதுகாத்து எதிர்காலத்தில் தமது தனித்தவத்தை நிலைநாட்ட வேண்டுமாயின் போலித் தேசியவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வழிமுறை நோக்கி தமது அரசியல் பலத்தை வழங்குவதனூடாகவே அதை நடைமுறை சாத்தியமாக்க முடியும் என்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரபல சட்டத்தரணியும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரசார நடவடிக்கையை முன்னெடுத்திருந்த நிலையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவகள் கூறுகையில் –

கடந்த காலங்களில் தீவக மக்கள் பலவேறு தேவைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கியிருந்த நேரத்தில் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 90 களில் இப்பகுதிக்கு வருகைதந்து மக்களின் வறுமை நிலையை போக்கியது மட்டுமல்லாது அவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொடுத்திருந்தார். இதனால்தான் இன்றும் தீவகப்பிரதேச மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை தமது ஆட்சியாளர்களாக தெரிவுசெய்து வருகின்றனர்.

ஆனால் மாற்றுத் தமிழ் தரப்பினரது தவறான கருத்துக்களினால் ஈர்க்கப்பட்ட அதிகளவான தமிழ் மக்களது தெரிவுகளால் தவறானவர்களிடம் அரசியல் அதிகாரங்கள் சென்றுள்ளதால் தமிழ் மக்களுடைய எதிர்கால வாழ்வியல் அரசியல் உரிமை தொடர்பில் இன்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான அச்ச நிலையை மாற்றியமைக்க வேண்டுமாயின் நடைமுறை சாத்தியமான ரீதியில் உரிமைகளை பெற்றுத்தரவல்ல எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களுக்கு அதிகாரங்களை கையளிக்க வேண்டும் என்ற யதார்த்தத்தினை மக்கள் உணர்ந்து உறுதிசெய்ய வேண்டும்

அந்தவகையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எமது வீணைச்சின்னத்திற்கு உங்கள் ஒவ்வொருவரது வாக்குகளையும் அளித்து எமது கட்சியை பலப்படுத்தி உங்களது எதிர்காலத்தை வழமாக்கிக்கொள்ளுங்கள் என்றார்.

Related posts: