கொரோனா தொற்று நோய் மாத்திரமின்றி யுத்தமும் நாட்டின் மோசமான நிலைக்கு காரணம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Friday, September 30th, 2022

கொரோனா தொற்று நோய் மாத்திரமின்றி உக்ரைன் யுத்தம் காரணமாக உலகளவில் பொருளாதார ஸ்திரமின்மை மோசமாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் 55வது வருடாந்த கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக அரசியல் நிலைமைகள் இந்த பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமடைய செய்துள்ளது.

நாட்டில் அதிகரித்துள்ள உணவு மற்றும் எரிபொருள் விலைகள் நடுத்தர வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துள்ளது.

அது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய சமூகத்திற்கு தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு ஏதுவாக அமைந்துள்ளது.

பாரிய பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை நாட்டின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக முன்னர் எப்போதும் இல்லாத வகையில் நிதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து அரசாங்கம் அறிந்துள்ளது.

இதன் காரணமாக சமூக பாதுகாப்புக்காக அதிகளவான நிதியையும் வளங்களையும் ஒதுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்து!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் விவகாரம் - மீண்டும் செவ்வாயன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாதங்கள...