சுவாசப் பிரச்சினைகள், இருப்பின் தங்கள் பகுதியின் பொது சுகாதார அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொள்ளவும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, May 26th, 2020

உடல்நிலை பாதிக்கப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவதுடன் மருத்துவ சிகிச்சையையும் பெறவேண்டும் என சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுவாசப் பிரச்சினைகள், காய்ச்சல் இருமல் போன்றவற்றினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லக்கூடாது தங்கள் பகுதியின் பொது சுகாதார அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அலுவலகத்தில் அல்லது தொழிற்சாலையில் பணியிலிருக்கும் வேளை ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டால் என்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களிற்கு மருத்துவமனைகள் மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் குறித்த தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அறிவுறுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் பாடசாலை அதிபர்களை ஆசிரியர்களை சந்திக்கவுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: