சாவகச்சேரி வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு கட்ட நிர்மாணப்பணி நிறைவு!

Wednesday, December 28th, 2016

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை  வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட விபத்து அவசரப் பிரிவுக்கான  3 மாடி கட்டடத்தொகுதி வேலைகள் நிறைவடைந்த நிலையில் சுகாதாரத்திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுகாதார அமைச்சினால் ஏ-9 வீதியுடன் இணைந்துள்ள வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் தலா 200 மில்லியன் ரூபா செலவில் விபத்து அவசர சிகிச்சைப்பிரிவுகள் அமைக்க 2015ஆம் ஆண்டில் மாகாண சுகாதார அமைச்சிடம் வழங்கப்பட்டது. மாகாண சுகாதார அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டன.

முதற்கட்டமாக கட்டம் அமைக்கும் பணிகள் ஒப்பந்ததாரரிடம் கையளிக்கப்பட்டன. அந்த வேலைகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்ட வேலைகளாக கட்டடத்திற்கான மின் இணைப்பு உட்பட ஏனைய உள்ளக வேலைகளம் 3ஆவது வேலைத்திட்டமாக சிகிச்சைப் பிரிவுகளுக்கான உபகரணங்கள் கருவிகள் இணைக்கப்படுவதும் இடம்பெறவுள்ளன. மாகாண சுகாதார அமைச்சரின் முயற்சியினால் வவுனியா பொது வைத்தியசாiலில் நிர்மாணிக்கப்பட்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு வேலைகள் முழுமையாக நிறைவு செய்யப்படும் நிலையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chavakacheri_Hospital_95861

Related posts: