நள்ளிரவுமுதல் மீண்டும் விலை குறைகிறது லிட்ரோ எரிவாயு – நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவிப்பு!
Tuesday, May 2nd, 2023
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த எரிவாயுவின் விலை குறைந்தது 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த எரிவாயு கொள்கலன் தற்போது 3,738 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று நள்ளிரவுமுதல் இந்த விலையில், மாற்றம் ஏற்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம...
வேலணையில் சிறப்பாக நடைபெற்ற பிரதேச முன்பள்ளி சிறுவர் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு!
ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது - ஜனாதிபதி...
|
|
|


