இலங்கைக்கு மற்றுமொரு பாரிய உதவியை வழங்குகிறது இந்தியா – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
Thursday, April 21st, 2022
இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலதிகமாக 500 மில்லியன் டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
அத்துடன் பங்களாதேஷுக்கு வழங்க வேண்டிய 450 மில்லியன் டொலர்களை ஒத்திவைக்க அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
“சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் (IMF) எங்களை வந்தடைய சுமார் ஆறு மாதங்கள் ஆகும்,
அது தவணை முறையில் கிடைக்கும்” என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இம் மாதத்துக்குள் ஔடத விலை கட்டுப்பாட்டுச் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டும்!
விசேட தேவைகளையுடைய பிள்ளைகளுக்கு புதிய விளையாட்டுத் திட்டம்!
தேங்காய் விலை சடுதியாக அதிகரிப்பு – நிறுத்தப்பட்டது உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி!
|
|
|


