சாவகச்சேரி திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

சாவகச்சேரி மகிழங்கேணி திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியியின் சாவகச்சேரி நகர நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 2018 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பிரகாரம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த தளபாடங்களை கட்சியின் சாவகச்சேரி நகர நிர்வாகச் செயலாளர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் திருவள்ளுவர் சனசமூக நிலைய தலைவரிடம் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடும் அரசியல் தலையீடு : தகுதி அல்லாதோரின் உள்ளீர்ப்பே வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிறு...
ஜனாதிபதி பணிப்புரை - சீரற்ற காலநிலையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் எதிர்வரும் திங்...
பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் விவகாரம் -இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில...
|
|