ஜனாதிபதி பணிப்புரை – சீரற்ற காலநிலையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் எதிர்வரும் திங்களன்று கையளிக்கவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Friday, November 12th, 2021

பெரும்போகம் மற்றும் எதிர்வரும் போகங்களுக்கு தேவையான தாவர போசாக்கு, அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான அறிக்கையினை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்ப்பார்ப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

முன்பதாக சீரற்ற காலநிலையால் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் தாவர ஊட்டச்சத்துகளை வழங்குவது தொடர்பான அறிக்கையொன்றை தயாரித்து வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஸ்ட பேராசிரியர் உதித்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கான அறிக்கையினை தயார்ப்படுத்துவதற்காகத் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் போசாக்கு தொடர்பில் உரிய ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த முறை பெரும்போகம் மற்றும் எதிர்வரும் போகங்களுக்கு தேவையான தாவர போசாக்கு, அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான அறிக்கையினை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்ப்பார்ப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: