சாரதி அனுமதிப்பத்திரம் – மருத்துவச் சான்றிதழ் பெற 8 மணிக்கு வருமாறு அறிவுறுத்து!

Thursday, January 24th, 2019

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெறுவோருக்கு நுழைவுத்துண்டு தினமும் காலை 8 மணி தொடக்கம் மதியம் 1.30 மணிவரை வழங்கப்படும். அதனால் எவருமே அங்கு அதிகாலையில் வந்து வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக யாழ்ப்பாணக்கிளை அலுவலகம் தினமும் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். ஆகையால் மருத்துவச் சான்றிதழ் எடுக்க வருவோர் அதிகாலையில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

வெளிமுகவர்களின் பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதிகாலையில் வருகை தரும்போது மக்களை ஒழுங்குபடுத்தி பெயர் எழுதுவதற்குத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தால் எவரும் நியமிக்கப்படவில்லை.

தனிநபர்கள் அல்லது வெளிமுகவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் எமது அலுவலகத்துடன் நேரடியாக அல்லது 021 222 5000 தொலைபேசி இலக்கத்தினூடாக அறியத்தரின் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவச் சான்றிதழுக்கான கட்டணமாக 800 ரூபா அறவிடப்படுகின்றது. அதற்கான பற்றுச்சீட்டை கட்டாயம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் என்று மாவட்டச் செயலர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts: