ஒரு மாதகாலத்தின் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்பு – கல்வியமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப்பு!

Monday, May 11th, 2020

ஒரு மாதகாலத்தின் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படலாம் என தெரிவித்துள்ள கல்வியமைச்சர் டலஸ் அலகபெரும பாடசாலைகளை ஆரம்பிப்பது நான்கு கட்டங்களாக இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களிற்கு அமையவே பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதி குறித்த அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்து பாடசாலைகளிலும் தொற்றுநீக்கல் செயற்பாடுகள் இடம்பெறும் என தெரிவித்துள்ள கல்வியமைச்சர் அதற்கு நான்கு நாட்களிற்கு பின்னரே பாடசாலைகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சாதாரணதர உயர்தர வகுப்பு மாணவர்களிற்கான வகுப்புகளே முதலில் ஆரம்பமாகும் எனவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: