சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய தேவையான டொலரை பெற்றுக் கொள்ள வசதிகளை ஏற்படுத்துமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை!

Thursday, October 28th, 2021

சந்தையில் நிலவும் சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்கு தேவையான டொலரை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு சீனி இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தம்மிடம் கூறியதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனி இறக்குமதி செய்வதற்கு தேவையான 18 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அவர்கள் முன்னதாக அரசாங்கத்திடம் கோரியிருந்தனர். இதற்கு உரிய தீர்வு கிடைக்கப் பெறவில்லை.

குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு தேவையான 30 ஆயிரம் மெற்றிக் டன் சீனியை இறக்குமதி செய்வதற்காக அவர்கள் இந்த நிதியை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: