சாதாரண தரத்தில் தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கு தொழில் வாய்ப்பு – தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, March 4th, 2022

2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக, உயர்தரத்திற்கு தகுதி பெற தவறிய மாணவர்களை, தொழில் பயிற்சிகளில் ஈடுபடுத்தி தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மனித வள மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ,உயர்தரத்திற்கு தகுதி பெறாதோரின் எண்ணிக்கை 98 ஆயிரத்திற்கும் மேற்பட்டதாகும். இதில் கணித பாடத்தில் சித்தி எய்த தவறியமை இருப்பினும் பின்னர் சித்தி எய்தியமை அடிப்படையில் கல்வி பொது தராதர உயர்தர மாணவர்களை தவிர்ந்த ஏனையவர்களை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டம் 2 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. முதலாவது கட்டத்தின் கீழ் தற்போதைய நோக்கத்திற்கு உட்பட்ட மாணவர்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இரண்டாவது கட்டத்தின் கீழ் தொழில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள, இளைஞர் சேவை மற்றும் தேசிய இளைஞர் படையணியில் ஈடுப்பட்டுள்ள மற்றும் தொழில் ஈடுப்பட்டுள்ள மாணவர்களை இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் பிரதேச செயலாளர் மட்டத்தில் அடையாளம் காணப்பட்டு அவர்களது திறன் ஆற்றல்களுக்கு அமைவாக தொழில் பயிற்சிகளில் ஈடுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இவர்கள் பிரதேச தொழில் வழிகாட்டி ஆலோசனை அதிகாரிகள் மற்றும் மனிதவள அதிகாரிகளை சந்தித்து தமது தகவல்களை வழங்க முடியும். வேலைத்திட்டம் தொடர்பான தகவல்கள் www.done.gov.lk இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வேலைத்திட்டத்தில் அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒரு வருட காலத்திற்குள் NVQ தரத்தை அடைய கூடியதாக இருக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: