ஆசிய பசுபிக் இராணுவத்தலைவர்கள் மாநாட்டில் இராணுவத்தளபதி!

Thursday, September 21st, 2017

இன்டோ ஆசிய பசுபிக் நாடுகளின் இராணுவத்தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சியோலியில் இடம்பெறும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்காக இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான நான்கு நாட்களைக்கொண்ட மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இராணுவத்தளபதி கடந்த 18ஆம் திகதி தென்கொரியா பயணமானார்.

‘ஒற்றுமை முயற்சி இராணுவ பங்கீட்டிற்கான தரைப்படை நடவடிக்கைகள் அல்லாத பாரம்பரியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்’ என்ற தொனிப்பொருளில் இநத மாநாடு இடம்பெறுகின்றது.29 நாடுகளின் இராணுவ தளபதிகள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் முன்னாள் ஜக்கியநாடுகளின் செயலாளர் ஜெனரல் பான்கிமூன் முதல் நாள் பிரதான உரையை நிகழ்த்தினார்.

இந்த ஆண்டு பங்கேற்பாளர்களிடையே இருதரப்பு மற்றும் ‘இராணுவ இராஜதந்திரத்திற்கான’ வாய்ப்பு தொடர்பாக ஆராயப்பட்டது.இந்த நிகழ்வில் ஜெனரல் வின்சன்ட்கே. புருக்ஷ் சோய்யங்ஜின் தென்கொரியாவின் முன்னாள் தூதுவர் மற்றும் புருக்கிங் நிறுவனத்தின் மைக்கேல் ஓன்லான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts: