அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயார் – பொருளாதாரத்தைச் சீர்செய்ய மக்கள் விரும்பாத தீர்மானங்களை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, January 8th, 2024

அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், பொருளாதாரத்தை சரியான திசையில் செலுத்துவதற்கு மக்கள் விரும்பாத தீர்மானங்களை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

“தமிழ்க் கட்சிகளுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் ஒற்றுமை இல்லை.

ஆனால், தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளனர். வடக்கு விஜயத்தின்போது இதனை நான் புரிந்து கொண்டேன்.

எனவே, தமிழ் மக்களையும் அரவணைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதேவேளை, அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இணைந்து பயணிக்குமாறு எதிரணியில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுகின்றேன்.

நாட்டின் சகல துறைகளிலும் அபிவிருத்தி ஏற்பட வேண்டும். இந்த அபிவிருத்தியில் தமிழ் மக்களின் பங்களிப்பு முக்கிய இடம் வகிக்க வேண்டும்.

இன, மத, மொழி வேறுபாடின்றி அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் அரசியல் தீர்வுக்கான பயணமும் தடையின்றி தொடரும்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி மத்திய நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ...
ஆறு மாத காலத்தில் 428 முறைப்பாடுகள் - சொத்து மோசடி தொடர்பில் 42 பதிவுகள் - இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்க...
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் - மாகாண ஆளுநர்களிடம் பிரதமர...