வீதியில் செல்பவர்களை வளர்ப்பு நாய் கடித்தால் பொலிஸில் முறையிடலாம் – பொலிஸார் !

Saturday, January 6th, 2018

வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று வெளியே சென்று வீதியால் செல்பவரை கடித்துக்காயப்படுத்தியது என நாய் வளர்க்கும் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு மேற்கொண்டால்;: உரிமையாளருக்கு எதிராக நடவெடிக்கை மேற்கொள்ள முடியும் என்று வவுனியாப்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குடியிருப்புப்பகுதியில் தனியார்; கல்வி நிலையத்துக்குச் சென்ற மாணவி ஒருவரை கித்துள் வீதியில் உள்ள வீட்டு நாய் ஒன்று நடுவீதியில் வைத்துக்காயப்படுத்தியுள்ளது.   இதையடுத்துக் குறித்த மாணவிக்கு  அந்தப்பகுதியில் உள்ளவர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவி அங்கிருந்து வீடு சென்றுவிட்டார்.

இந்தச்சம்பவத்தையடுத்து குறித்த வீதியிலுள்ள வீட்டின் உரிமையாளரின் வளர்ப்பு நாய் ஒன்று அந்தப்பகுதியால் செல்பவர்களைக் கடிக்கின்றது என்றும் அதைக்கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளமாறும் வன்னிப்பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் தமிழ் மொழி சேவைப்பிரிவுக்கு  தகவல் வளங்கப்பட்ட போதே அங்கு கடமையிலிருந்த பொலிஸார் இந்தக்கருத்தைத் தெரிவித்துள்ளனர். இதற்கு நாய்க்கடிக்கு உள்ளானவர் உடனடியாக மருத்தவ மனையில் சேர்க்கப்படவேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால் வன்னிப்பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் செயற்படும் தமிழ் மொழி சேவைப்பிரிவான 076 6224949, 0766226363 ஆகிய அலை பேசி இலக்கங்களுக்கு தமிழ் மொழி மூலம் வழங்க முடியும் – என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: