சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Thursday, September 8th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெற்ற பின்னர் வெளியிடப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊழியர் மட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அடுத்த சில வாரங்களுக்குள் தனது ஒப்புதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பணியாளர்கள் நிலை ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதும், ஒப்பந்தம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
நடுக்கடலில் தீப்பிடித்த சர்வதேச கப்பல்: காப்பாற்றிய இலங்கை கடற்படை!
குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை!
தரச் சான்றிதழ் அற்ற மருந்து வகைகள் தொடர்பில் விசாரணை வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
|
|
|


