யாழ் மாவட்டப்  பனை, தென்னை வள அபிவிருத்திக்  கூட்டுறவுச்சங்க ஊழியர்களுக்கான  உபகரணங்கள் வழங்கப்பட்டன

Sunday, March 6th, 2016

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மற்றும் மீள்குடியேற்றம், இந்து மத விவகார அமைச்சின் எற்பாட்டில் பனை சார் உணவு உற்பத்திகளின் தரக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் யாழ் மாவட்டப்  பனை, தென்னை வள அபிவிருத்திக்  கூட்டுறவுச்சங்க ஊழியர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  நேற்று வெள்ளிக்கிழமை (05-3-2016)  யாழ். கைதடி பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பனை அபிவிருத்தியின் தலைவர் ஆ.கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், இந்து மத விவகார அமைச்சின் செயலாளர் பா. சிவஞானசோதி கலந்துகொண்டு 36 யாழ் மாவட்ட பனை,தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க ஊழியர்களுக்கான  உபகரணங்களை வழங்கிவைத்தார்..

 60 மில்லியன் ரூபா செலவில்  உபகரணங்களுக்கான உதவிப்பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன..

இந் நிகழ்வில்  பிரதம அதிதியாகக்  கலந்து கொண்டு உரையாற்றிய சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வு,மற்றும் மீள்குடியேற்றம், இந்து மத விவகார அமைச்சின் செயலாளர் பா. சிவஞானசோதி கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேச ரீதியாகப்  பனை உற்பத்திப்  பொருட்களைச்  சந்தைப்படுத்துவதற்கான எற்பாட்டினை எதிர்காலத்தில் செய்வதற்குரிய காலம் தற்போதைய  ஆட்சியில் காணப்படுவதாகவும் அதற்காக சகல நடவடிக்கையிலும் டி.எம்.சுவாமிநாதன் எடுத்துவருவதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், இந்து மத விவகார அமைச்சின் செயலாளர் பா. சிவஞானசோதி தெரிவித்தார். எமக்கான குறிக்கோள்கள் அடைவு மட்டத்தினைப்  பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தப்  பணிகளை எடுத்துவருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்..

நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மற்றும் மீள்குடியேற்றம், இந்து மத விவகார அமைச்சின் மேலதிக  செயலாளர் க. நயிட்டின் மற்றும் யாழ் மாவட்டப்  பனை, தென்னை வள அபிவிருத்திக்  கூட்டுறவுச்சங்கத்  தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: