நடுக்கடலில் தீப்பிடித்த சர்வதேச கப்பல்: காப்பாற்றிய இலங்கை கடற்படை!

Wednesday, April 5th, 2017

பனாமா கொடியுடன் பயணித்த டெனிலா என்ற சரக்கு கப்பலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கொழும்பிலிருந்து 11 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைக்கு, கப்பலின் உள்ளூர் பிரதிநிதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.

அதற்கமைய உடனடியாக செயற்பட்ட இலங்கை கடற்படையினர், தீயினை கட்டுப்படுத்துவதற்காக பீ 412 மற்றும் பீ 436 என்ற வேக தாக்குதல் படகுகள் இரண்டினை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் கொழும்பு துறைமுகத்தில் உள்ள இராவணா மற்றும் மஹாவெவ் என்ற இழுபறி படகுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இராவணா மற்றும் மஹாவெவ் இழுபறி படகுகள் தீ பிடித்த கப்பலுக்கு அருகில் சென்று தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் வரை பீ 412 மற்றும் பீ 436 என்ற வேகமான தாக்குதல் படகுகள், அந்த கப்பல் ஊழியர்களின் உயிரை காப்பாற்றுவதற்கும், கப்பலில் ஏற்பட்ட நட்டத்தை குறைப்பதற்காகவும், நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய இராவணா மற்றும் மஹாவெவ் இழுபறி படகுகளினால் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரையில் 2 தாக்குதல் படகுகளும் கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் காரியல் மற்றும் ஐ.என்.எஸ் தர்ஷாக் ஆகிய இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

கொழும்பில் இருந்து மேற்கு பகுதியில் 11 கடல்மைல் தொலைவில் வணிகக் கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. தீயை அணைக்கும் பணிக்காக கடற்படை கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே சர்மா தெரிவித்துள்ளார்.

எனினும் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

Related posts: