சர்வதேச நாணய நிதியத்தினால் இம்முறை வழங்கப்பட்ட கடன் ஏற்கனவே கிடைத்த கடன்களை போன்றதல்ல – மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு!

Friday, April 7th, 2023

சர்வதேச நாணய நிதியத்தினால் இம்முறை வழங்கப்பட்ட கடன் இதற்கு முன்னர் உள்ள சந்தர்ப்பங்களில் கிடைக்கப்பெற்ற கடன்களை போன்றதல்ல. அரசின் பிரதான தேவைகளுக்காக வரவு செலவுத் திட்டத்திற்கு உதவுவதற்காக கிடைத்த கடன் என்றும், அதனால் அடிப்படைத் தேவைகளுக்கு பயன்படுத்துவதால் எவ்வித  பிரச்சினைகளும் இல்லை என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாதாந்த கொள்கை தொடர்பான ஊடகவியலாளர் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் –  வெளிநாட்டுக் கடன் செலுத்தும் நாடாக இலங்கை காணப்படுவதுடன், தற்போது கிடைத்த கடன் நிதியிலிருந்து இந்திய கடனை செலுத்துவதா அல்லது வேறு உள்நாட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதா ? என அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்றும்,   எவ்வாறாயினும் இந்நிதியை பயன்படுத்துவதால் எவ்வித தவறும் இல்லை என்றும்  மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான நிலை எதிர்காலத்தில் 50 வீதத்தை விட குறைவடையும் எனவும், எதிர்வரும் மாதத்தினுள் நிலைமை சீரடையும் எனவும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: