சம்பந்தன் வேண்டுகோள் – சுமந்திரனால் அழைக்கப்பட்ட கூட்டத்தை நிராகரித்தனர் பங்காளிகள் – தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பெரும் குழப்பம்!

Wednesday, November 16th, 2022

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின் பேரில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் அழைப்பை விடுக்கப்பட்ட கூட்டத்தை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் புறக்கணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகீன்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை குறித்த கூட்டம்’ ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றிருந்தது.

இதில் ஏனைய பங்காளிக் கட்சிகள் புறக்கணித்திருந்ததால் இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் மாத்திரமே இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

குறிப்பாக இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் மாத்திரம் பங்கேற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பை நடத்துவதற்கு விரைவில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுவரும் பெருங் குழப்பங்கள் தலைமைப் பொறுப்பு போட்டி மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ள வெறுப்புக்கள் காரணமாக அண்மைய காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் சந்தித்துவருகின்றது.

அத்துடன் சுமந்திரனின் கருத்துக்களை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் அங்கத்தவர்களும் பகிரங்கமாகவே விமர்சித்து வருவதால் பதிவு செய்யப்படாதுள்ள குறித்த கட்சி பல்வேறு துண்டுகளாக பிரிந்து செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது - கோட்டாபய ராஜபக்ஸ!
கூட்டமைப்பின் ஆளுமையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திருமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை ...
கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சி...