வேலணை நீதிவான் நீதிமன்றம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்!

Saturday, February 24th, 2018

வேலணை பிரதேச செயலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கட்டடத்தில் வேலணை நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் தொடக்கவிழாவிற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டார்.

வேலணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீதிவான் நீதிமன்றில் கிழமைக்கு இரண்டு நாட்கள் வழக்குகள் இடம்பெறும். குறிப்பாக வேலணை, நயினாதீவு, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி பிரதேச மக்களின் நன்மை கருதி இந் நீதிமன்றம் அமைக்கப்படிருந்தது.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்குகளுக்கு பொதுமக்கள் நீண்ட தூரம் பயணித்தே செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டது. இதனை கருத்திற் கொண்டு நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வேலணைக்கு நீதிவான் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இவ் ஆரம்ப விழாவில் சிறைச்சாலை வாகனத்தில் கைதிகள் அழைத்து வரப்பட்டதுடன் முதலாவது வழக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் முற்படுத்தப்பட்டிருந்தார். இந் நிகழ்வில் ஊர்காவற்துறை நீதிமன்ற ஊழியர்கள், சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related posts:


யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் அமைக்கும்  பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடுகிறது...
போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்...