சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்படவில்லை – ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டுள்ளார் – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர், ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவே ஞானசார தேரர், அந்த செயலணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றில், இந்த செயலணிக்குழு தொடர்பாக வினவப்பட்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு ஆலோசனை வழங்க நியமிக்கும் செயலணிக் குழுவிற்கான தலைவர் பதவியில் தான் விரும்பிய நபரை நியமிக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்தால், நண்பர் ஒருவருடன் பழகக்க கூட கட்சித் தலைவர்களிடம் அனுமதி பெற நேரிடும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை நீதியமைச்சராக அலி சப்ரியை நியமித்த போது இதேபோன்ற எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, எனினும் அலி சப்ரி தற்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வயைில் சேவையை நிறைவேற்றி வருகிறார் எனவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|