எதிர்க்கட்சியின் போலி பிரசாரமே எரிபொருள் தட்டுப்பாடு குறித்து – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Tuesday, November 16th, 2021

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்பதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போதே நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டால் எவ்வாறு எரிபொருளை டொலரில் கொள்வனவு செய்ய முடியும் என்றும் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியிருந்தார்.

குறித்த கேள்விகளுக்கு பதிலளித்திருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லாததால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சியினர் போலியான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: