யாழ்ப்பாணத்தில் மரக்கறி வகைகளின் விலை திடீரென அதிகரிப்பு!

Friday, May 18th, 2018

எரிபொருட்களின் விலையேற்றத்தை அடுத்து குடாநாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதனால் மக்கள் பல்வேறுப்பட்ட நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டதையடுத்து குடாநாட்டில் செய்கை பண்ணப்படும் விவசாய உற்பத்திகளின் விலைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாளாந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களும் வறிய நிலையில் வாழும் குடும்பங்களும் பல்வேறு நெருக்கடிகளையும் அசௌகரியங்களையும் சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மரக்கறிகளின் விலையேற்றத்தினால் நெருக்கடிகளை சந்தித்துள்ள அதேவேளை கடலுணவுகளின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில், செய்வதறியாது திண்டாடுவதை அவதானிக்க முடிகிறது.

கடந்த காலங்களில் தம்புளையில் இருந்து மறக்கறிகள் தருவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு பெய்துவரும் கடும் மழை காரணமாக விவசாயச் செய்கை முழமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடாநாடு உள்ளிட்ட வட பகுதியில், மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. குடாநாட்டின் இன்றைய நிலவரப்படி தக்காளிப்பழம், முருங்கைக்காய், கத்தரிக்காய். வெண்டிக்காய், பயிற்றங்காய் உள்ளிட்ட மரக்கறிகளும் வெங்காயம், மிளகாய், கறி மிளகாய் உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளது.

இந்நிலை தொடருமாகயிருந்தால் மக்கள் பாரியதொரு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் nhகடுக்க வேண்டிய அவலத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என்று பொருளியல் ஆய்வளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் பொருட்களும் அதிகரித்துள்ளமையானது மக்களின் வாழ்வியலில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: