கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சனி!

Friday, April 2nd, 2021

கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கோவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவுமுதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அஸ்ட்ராசென்கா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமத நிலமை காரணமாக இவ்வாறு தற்காலிக அடிப்படையில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  அவர் கூறியுள்ளார்.

அஸ்ட்ராசென்கா தடுப்பூசி ஏற்றுமதியை இந்திய நிறுவனம் இடைநிறுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கைக்கு உரிய நேரத்தில் அஸ்ட்ராசென்கா தடுப்பூசி கிடைக்கப் பெறும் என ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், உரிய நேரத்திற்கு இலங்கைக்கு இந்த தடுப்பூசி கிடைக்கப்பெறக்கூடிய சாத்தியங்கள் குறைவு என தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பூசியின் முதலாம் மருந்தளவு வழங்கப்பட்டவர்களக்கு இரண்டாம் மருந்தளவினை வழங்கும் நோக்கிலேயே இவ்வாறு புதிதாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமைம குறிப்பிடத்தக்கது

Related posts: