இன்றுடன் முடிவடையும் பொது மன்னிப்புக் காலம்!

Friday, June 17th, 2016

சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் முடிவடைவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க கடந்த மே மாதம் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட கால எல்லை இன்றுடன் முடிவடைகிறது

சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை பொலிஸ் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.

பொது மன்னிப்புக் காலத்தில் ஒப்படைக்கப்படாத ஆயுதங்கள் அதன் பின்னர் அபகரிக்கப்படுவதுடன் அதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் பொது மன்னிப்புக் காலத்தில் தம்மிடவுள்ள சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது எனவும் சட்டவிரோத ஆயுத பயன்பாட்டினால் ஏற்பட்டு வரும் பாதக விளைவுகளை தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறு ஒரு நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாட்டில் அறிவார்ந்த அரசியல்வாதிகள் இல்லை - இலங்கை வாகன இறக்குமதியாள...
அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவை பெற்றிருக்க வேண்டும் - ஜ...
3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகவல்!