நெல் செய்கையினால் பாரிய நட்டம் – துயருற்ற விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்பு!
Monday, January 22nd, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற் செய்கையினால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் இன்று கையளித்துள்ளனர்.
நெல்லுக்கான நிர்ணய விலை இல்லாமையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால், கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற் செய்கையினால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்திற்கு அரசாங்கம் உரியத் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான மகஜர் ஒன்றையும் அவர்கள் இன்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மொரட்டுவ பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்பு!
எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பாடசாலை வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கை
சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத...
|
|
|
இலங்கையின் முடக்கநிலை தளர்த்தப்பட்டதன் விளைவு 14 நாட்களுக்கு பின்னரே தெரியும் - சமுதாய மருத்துவ நிபு...
ஏப்ரல் 8 முதல் புத்தாண்டு விசேட பேருந்து சேவை ஆரம்பம் - இலங்கை தேசிய போக்குவரத்து சபை தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி - திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு பார்வையாளர்களை அழைக்க...


