மொரட்டுவ பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்பு!

Thursday, May 12th, 2016
மொரட்­டுவை பல்­க­லை இறு­தி­யாண்டு மாண­வர்­களின் கூட்டு முயற்­சியில் மனித மூளையினால் கட்­டுப்­ப­டுத்தக் கூடிய ரோபோ இயந்­திரம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இயந்­தி­ர­வியல் பொறி­யியல் பிரிவின் இறு­தி­யாண்டு மாண­வர்­க­ளான இசிர நாஒ­துன்ன சாமிக்க, ஜனித் பெரேரா மற்றும் சமீர சந்­த­ருவன் ஆகிய மூவ­ருமே இதனைக் கண்டுபிடித்துள்­ளனர்.
மேலும் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ரான கலா­நிதி திலின லலி­த­ரத்ன மற்றும் கலா­நிதி ருவன் கோபுர ஆகி­யோரின் வழி­காட்டல் இக்­கண்­டு ­பி­டிப்­புக்கு உறு­து­ணை­யாக அமைந்­த­தாக தெரிவிக்கப்பட்­டுள்­ளது.
மனித மூளை­யி­லி­ருந்து வெளி­யி­டப்­படும் ஈ.ஈ.ஜீ. அலை­களின் மூலம் இந்த ரோபோ கட்டுப்ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் விசேட தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்கு தேவை­யான உணவை அளிக்கக்­கூடிய ஆற்­றலும் இதற்கு உண்­டென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
நீண்ட பயிற்­சிகள் ஏது­மின்றி பெரும்­பாலும் இந்த ரோபோ மூளை­யினால் பிறப்­பிக்­கப்­படும் கட்­டளை அல்­லது அலை­களின் மூலம் தொழிற்­ப­டு­கி­றது. தற்­போது உட­லா­ரோக்­கியம் கொண்­ட­வர்­களை கொண்டு இந்த பரி­சோ­த­னைகள் இடம்­பெற்று வரு­கின்ற அதே­வேளை, விரைவில் விசேட தேவை­யு­டை­ய­வர்­களை ஈடு­ப­டுத்தி இதன் மேல­திக பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக குறித்த ரோபோ பரி­சோ­தனைக் குழு­வினர் தெரி­விக்­கின்­றனர்.
இந்த நிர்­மா­ண­மா­னது Steady State Visual evoked Potentials என்ற விசே­ட­மான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் மனித மூளையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய இது தொழிற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Related posts: