ஏப்ரல் 8 முதல் புத்தாண்டு விசேட பேருந்து சேவை ஆரம்பம் – இலங்கை தேசிய போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் போது கிராமங்களுக்கு செல்ல விரும்பும் நபர்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து விசேட பேருந்து சேவையை ஈடுபடுத்தவுள்ளது.

பேருந்து சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும். முதல் கட்ட பஸ்கள் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இயக்கப்படும் என இலங்கை தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, செபஸ்டியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்தின் பஸ் சேவைகளுக்கான தேவை அதிகரித்தால் பேருந்து நடத்துனர்களுக்கு தற்காலிக பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்கள் இலவசமாக வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் கடவத்தை, கடுவல பஸ் நிலையங்கள் மற்றும் மகும்புர மல்டிபிள் எக்ஸ்சேஞ்ச் ஆகியவற்றிலிருந்து பேருந்துகள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.

இரண்டாம் கட்டத்தின் கீழ், காலி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, மொனராகலை, பதுளை, ஹட்டன், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கு தேவைக்கு ஏற்ப பேருந்துகள் தற்காலிக அனுமதிப்பத்திரத்தில் இயக்கப்படவுள்ளன.

புத்தாண்டுக் காலத்தில் பேருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மேலதிக பேருந்து கள் இயக்கப்படவுள்ளமைம குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சித்திரை முதல் மெலிஞ்சிமுனை மக்களுக்கு வறட்சிகால குடிநீர் வழங்க நடவடிக்கை - ஊர்காவற்றுறை பிரதேச சபை ...
இடைவெளியை கடைப்பிடிக்காவிடின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - பிரதி பொலிஸ்மா அதிபர்!
வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு - எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளது - சுங்கத்திணை...