கொழும்பு – வவுனியா வரையான புகையிரதம் யாழ்ப்பாணம் வரை சேவையில்!
Thursday, April 11th, 2019
கொழும்பு கோட்டை முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை நாளை(12) மற்றும் நாளை மறுதினங்களில்(13) யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, கொழும்பிலிருந்து பிற்பகல் 3.55 இற்கு புறப்படும் கடுகதி புகையிரத சேவை நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும். யாழ்ப்பாணம் சென்றடையும் குறித்த புகையிரம் நாளை மறுதினம்(13) அதிகாலை 3.00 மணிக்கு கொழம்பு நோக்கி புறப்படும் என புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமைதியை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிவிட்டால் சட்ட நடவடிக்கை!
சுயாதீன ஆணைக்குழுவுக்கு நாளை முதல் விண்ணப்பம் கோரல்!
மாலைத்தீவுக்கு அருகில் இன்றுகாலை நான்கு நில அதிர்வுகள் பதிவு - புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்...
|
|
|


