சுயாதீன ஆணைக்குழுவுக்கு நாளை முதல் விண்ணப்பம் கோரல்!
Tuesday, January 31st, 2023
சுயாதீன ஆணைக்குழுக்கு தகுதிவாய்ந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளைமுதல் கோரப்படவுள்ளன.
நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை தேசிய நாளிதழ்களில் நாளை தினம் அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் தேர்தல் இடம்பெறவுள்ள காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்காக விண்ணப்பங்களை கோருவது முறையற்ற செயற்பாடு என தாம் அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தில் குறிப்பிட்டதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்!
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நீதிப்பேராணை மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி ...
சமூக வலைத்தளங்களால் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு - குடும்ப சுகாதாரப் பண...
|
|
|


