இருபது பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்!

Saturday, April 16th, 2016

பண்டிகைக்கால சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 20 இற்கும் அதிகமான பேருந்துகளின் போக்குவரத்திற்கான அனுமதிப் பத்திரங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும். இத்தகைய பஸ்களுக்கு எதிர்காலத்தில் தற்காலிக போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட மாட்டாதென ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

பயண முடிவிடத்திற்கு அறவிடப்படும் கட்டணத்தை இடைநடுவில் இறங்கும் பயணிகளிடமும் அறவிட்டுள்ளமை குறித்து ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பான முறைப்பாடுகள் குறித்து மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையுடன் கலந்துரையாடியுள்ளதுடன், முறையற்ற கட்டண அறவீடுகள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

விசேட சேவையில் ஈடுபட்ட பஸ்களில் மேலதிக கட்டணம் அறவிட்டமை விசாரணைகளில் உறுதிசெய்யப்படும் பட்சத்தில் அந்த பஸ்களின் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பண்டிகைக்கால விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பஸ்களில் மேலதிக கட்டணம் அறவிடுப்பட்டிருந்தால் அதுகுறித்து 1 9 5 5 என்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறியத்தருமாறு பயணிகளிடம் கேட்கப்பட்டுள்ளது.

Related posts: