மாலைத்தீவுக்கு அருகில் இன்றுகாலை நான்கு நில அதிர்வுகள் பதிவு – புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தகவல்!
Friday, December 29th, 2023
இந்தியப் பெருங்கடலின் மாலைத்தீவுக்கு அருகில் இன்று காலை நான்கு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடீயுட்டாக முதலாவது நில அதிர்வும், 5.8 மெக்னிடீயூட்டாக இரண்டாவது நில அதிர்வும் பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 5.0 மெக்னிடியூட் அளவிலான மேலும் இரண்டு நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதுடன், இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது
000
Related posts:
விவசாயிகளின் எண்ணிக்கை குடாநாட்டில் வீழ்ச்சி – மாவட்டச் செயலகத்தின் புள்ளி விவரங்களில் தகவல்!
இலங்கையின் அரச தலைவர்களுக்கு சீன அரசாங்கம் புத்தாண்டு வாழ்த்து மடல் அனுப்பிவைப்பு!
செங்கடலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இலங்கையும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் – பா...
|
|
|


