விவசாயிகளின் எண்ணிக்கை குடாநாட்டில் வீழ்ச்சி – மாவட்டச் செயலகத்தின் புள்ளி விவரங்களில் தகவல்!

Saturday, December 3rd, 2016

யாழ்.மாவட்டத்தில் விவசாயம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டு குறைவடைந்துள்ளது. இருப்பினும் ஏனைய துறைகளில் தொழில் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.யாழ்.மாவட்டச் செயலக புள்ளி விவரத் தகவலிலேயே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.

2014ஆம் ஆண்டு 35ஆயிரத்து 29பேர் விவசாய நடவடிக்கையிவ் ஈடுபடடுள்ளனர். 2015ஆம் ஆண்டு 32,795 ஆகக் குறைந்துள்ளது. விவசாயத் தொழிலார்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு 24,971 ஆகக் காணப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு 28,821 ஆக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு 18,157 பேர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு 19,710 ஆக அதிகரித்துள்ளது. அரச தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோர் 2014ஆம் ஆண்டு 26,474 ஆகக் காணப்பட்ட நிலையில் 2015ஆம் ஆண்டு 27,636 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2014ஆம் ஆண்டு காணப்பட்ட ஆண்களின் எண்ணிக்கையை விட 2015ஆம் ஆண்டு ஆண்களின் எண்ணிக்கை குறைந்தள்ளது. ஆனால் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து;ளது 2014ஆம் ஆண்டு தனியார் துறையில் 14,242பேர் ஈடுபட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு 16,248ஆக அதிகரித்துள்ளது. தச்சுத்தொழில் நடவடிக்கையில் 2014ஆம் ஆண்டு 4,739பேர் ஈடுபட்டனர். அதுவும் 2015ஆம் ஆண்டு 4,926ஆக அதிகரித்துள்ளது.

Tamil_News_large_1236978

Related posts: