கொழும்பில் இடம்பெறும் டாடா நிகழ்வில் பங்கேற்பதற்காக 650 க்கும் மேற்பட்ட இந்திய பிரதிநிதிகள் வருகை!

Tuesday, February 7th, 2023

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள Tata Steel மற்றும் Tata Tiscon வருடாந்த முகவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 650 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்.

நேற்று நாட்டை வந்தடைந்த குழுவினருக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

இந்த மாநாடு மற்றும் தளவாடங்களை டாடா ஸ்டீலின் முக்கிய முகவர் மற்றும் தென்னிந்தியாவின் பிரதிநிதியான VNC குழுமம் கையாளுகிறது.

இலங்கையில் மாநாட்டை நடத்தும் டாடாவின் முடிவு, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்க இந்திய நிறுவனங்களின் விருப்பத்தின் நிரூபணமாகும்.

150 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்படும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டாடா ஸ்டீல் உள்ளது.

சுரங்கத்திலிருந்து முடிக்கப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் வரை முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட உலகின் புவியியல் ரீதியாக பன்முகப்படுத்தப்பட்ட எஃகு உற்பத்தியாளர்களில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: