பொருளாதார முகாமைத்துவ சபையை கலைத்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு!

Thursday, March 1st, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இயங்கும் பொருளாதார முகாமைத்துவ சபையை கலைத்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற  அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் குறித்த பொருளாதார முகாமைத்துவ சபையினால் எந்தவொரு நன்மையும் கிட்டவில்லை. வொக்ஸ்வகன் கார் உற்பத்தி, ஹொரணை டயர் உற்பத்தித் தொழிற்சாலை போன்ற எந்தவொரு செயற்திட்டமும் வெற்றியளிக்கவில்லை. அவை எல்லாம் நாட்டை ஏமாற்றும் செயற்பாடுகள் மட்டுமே.

ஜேர்மனி, கட்டார், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கையில் முதலீடு செய்வதற்காக பலர் முன்வந்த போதும் அந்த முதலீட்டாளர்களை ஈர்த்தெடுப்பதிலும் பொருளாதார முகாமைத்துவ சபை தோல்வியடைந்துள்ளது.

அவ்வாறான நிலையில் இனியும் அந்தச் சபை இயங்குவதை விட அதனைக் கலைத்துவிடுவது மேல் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: