கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Friday, November 19th, 2021
அரசாங்கம் என்ற வகையில் கொரோனா தொற்றுக்கான அனைத்து விடயங்களையும் செய்துள்ளோம் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை நூற்றுக்கு 75 சதவீதற்கும் மேற்பட்டோருக்கு இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எஞ்சிய பகுதி பொதுமக்களின் கைகளில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் மக்கள் தமது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஆசிரிய உதவியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை!
புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
விபத்துக்களை குறைப்பதற்கு விசேட பொறிமுறை - மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சாரதிகளுக்கு விரைவில் இரண்...
|
|
|


