கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்!

பண்டிகைக் காலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கில் பொலிஸ் தலைமையகத்தின் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்துமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கறிப்பாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பது குறித்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என்றும் புதுவருட கொண்டாட்டங்களின் போது குழுவாக கூடுவதனால், சுகாதார மற்றும் பொலிஸாரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி - வடக்கின் முதல்வர் சந்திப்ப ஒத்திவைப்பு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்!
பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீ...
|
|