இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்!
Wednesday, June 17th, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன், கொட்டகல பகுதியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி அலுவலகத்தில் 17.06.2020 அன்று கட்சியின் நிர்வாக சபை கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஜீவன் தொண்டமானை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க அனைவரும் ஏகமனதாக ஒத்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன் இதுவரையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அனுஷா சிவராஜா கட்சியின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுளள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கட்சியின் தலைமைத்துவத்திற்கு இதுவைரயில் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
குண்டுத் துகள்களுடன் இருப்பவர்களுக்கு பூரண சிகிச்சை!
உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியீடு!
நெல்லியடியில் சுற்றிவளைப்புத் தேடுதல்!
|
|
|


