பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் திகதி நிச்சயிக்கப்படும் -அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!

Friday, January 6th, 2017

வரும் காலத்தில் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தர, உயர்தர பெறுபேறுகள் வருடந்தோறும் குறிப்பிட்ட ஒரு தினத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2017ம் ஆண்டுக்காக பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் விடயம் தொடர்பாக குழறுபடிகள் அல்லது தவறுகள் நடைபெறுமாயின் சம்பந்தப்பட்டவர்கள் பதவி அந்தஸ்த்து பாராமல் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.

பாடசாலை பாடநூல்கள் வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று கோட்டே ஆனந்த கல்வி நிறுவனம் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குரிய பாடநூல்களை வழங்கிய பின் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2017 ம் ஆண்டு கல்வியில் பாரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆண்டு. இந்த ஆண்டு கல்வி மறுசீரமைப்பு ஆண்டாக கருதப்படுகிறது. தொடர்ந்தும் கல்வித் துறையில் பாரிய மாற்றங்களை கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்படி சுயாதீன கண்காணிப்பு சபையொன்றை நிறுவுவதற்கும் 13ம் ஆண்டு வரைக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்றல் கட்டாயமாக்கப்படும். அத்துடன் க.பொ.த. உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ‘டெப்’ (கைக்கணனி) பெற்றுக் கொடுக்கப்படும். அவர்களுக்கு தேவையான பாடநெறிகள் இக் கைக்கணனிக்குள் தரவிரக்கம் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களை முதலாம் ஆண்டுக்கு சேர்த்துக் கொள்ளும் விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். அதனை மீறுபவர்களுக்கு எதிராக பதவி அந்தஸ்து பாராமல் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

அரசியல் தொடர்பகளினூடாகவோ அல்லது நெருக்கமான நட்பு ரீதியாகவோ அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படமாட்டாது.

இம்முறை நாடு முழுவதும் உள்ள 43 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 42 மில்லியன் பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன.

410 வகையான பாடநூல்கள் அச்சிடப்பட்டன. பாடநூல்களை அச்சிடுவதற்கும் அவற்றை விநியோகிப்பதற்குமான 5415 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 2017 ம் ஆண்டில் தரம் 2 மற்றும் தரம் 8 க்ககாக புதிதாக 2 பாட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 53 வகையான பாடநூல்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன என மேலும் அவர் தெரிவித்துள்ளார்

akila

Related posts: