கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கியது இலங்கை – குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 559 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு!

Tuesday, May 19th, 2020

இலங்கையில் கொரோன தொற்றாளிகளின் எண்ணிக்கை 992 ஆக உயர்ந்துள்ள அதேநேரம்  குறித்த தொற்றிலிருந்து இதுவரை 559 பேர் பூரண குணமடைந்துள்ளது வீடுகளுக்கு சென்றுள்ளனர் என்னும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுடன் தற்போது 418 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என குறிப்பிட்டுள்ள சுகாதார அரமச்சு இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது

இதனிடையே நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 10 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மற்றைய நபர் அண்மையில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 992 பேரில் கடற்படையினர் 540 பேரும் ஏனைய படைகளைச் சேர்ந்தவர்கள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு அடையாளாம் காணப்பட்ட கடற்படையினரில் பெரும்பாலானோர் வெலிசர கடற்படை முகாமில் கடமையில் இருந்தவர்கள் அல்லது அங்கு தங்கயிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக அந்த கடற்படை முகாமிலிருந்த மேலும் 1000 சிப்பாய்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த செயற்பாடு, நேற்றும் நேற்றுமுன்தினமும் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: