சீனாவின் சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Wednesday, October 27th, 2021

அபாயகரமான பக்டீரியா உள்ளதாகக் கண்டறியப்பட்ட சீன சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பசளையின் மாதிரி மீளப் பரிசோதிக்கப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலில் உள்ள பசளையை அதனை அனுப்பிய சீன நிறுவனத்தினால் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சேதன பசளையின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதில் அபாயகரமான பக்டீரியாக்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, மீண்டும் அதனைப் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. அத்துடன் அதற்கான கட்டணமும் செலுத்தப்பட மாட்டாது.

கேள்வி பத்திர நிபந்தனைகளுக்கு அமைய குறித்த பசளை தொகுதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பொறுப்பேற்று உரிய தரத்தைக் கொண்ட பசளையை மீண்டும் வழங்குமாயின் அது ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: