கொரோனா தாண்டவம்: இதுவரை 33 ஆயிரத்து 993 பேர் பலி!

Monday, March 30th, 2020

இத்தாலியில் கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய முடக்கத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கு அந்த நாட்டின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்;கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஜப்பானிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கென் ஷிமுரா  உயிரிழந்தார்.

70 வயதுடைய அவர் நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த 23 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக ஜப்பானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர், 1970 காலப்பகுதிகளில் ஜப்பானில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்துள்ளதுடன், சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திரம் என்ற பெருமையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், அமெரிக்காவில் புதிதாக 275 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை மொத்தமாக 1 இலட்சத்து 42 ஆயிரத்து 735 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேநேரம் ஸ்பெயினில்; இதுவரை 6 ஆயிரத்து 803 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் அங்கு இதுவரை 80 ஆயிரத்து 110 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, சர்வதே ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 7 லட்சத்து 23 ஆயிரத்து 279 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: