கொரோனா தடுப்பூசிகள் குறித்த போதிய அறிவின்மையால் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மறுக்கின்றனர் – ஹேமந்த ஹேரத்!

Friday, July 30th, 2021

கொவிட் தடுப்பூசிகள் குறித்த போதிய அறிவின்மையால் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மறுப்பது அல்லது தயங்குவது குறித்து சுகாதார அமைச்சின் மருத்துவர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்

கொவிட் தடுப்பூசிகள் குறித்த போதிய அறிவின்மை காரணமாக பொதுமக்கள் தடுப்பூசியை பெற மறுக்கின்றமை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள அவர் குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் அச்சமடையவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை பெறுவது பிரச்சினையாகயிருந்தால் அவர்கள் அந்த பகுதி சுகாதாரவைத்திய அதிகாரியுடன் அல்லது தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைகளை பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ காரணங்களிற்காக தடு;ப்பூசியை பெறவேண்டாம் என மருத்துவர்கள் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தினால் மாத்திரமே தடுப்பூசியை தவிர்க்கவும் இல்லாவிட்டால் தடுப்பூசியை தவிர்க்கவேண்டாம் என வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: