தலையிட வேண்டாம் – ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான உத்தரவு!

Monday, February 10th, 2020

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு 07 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறானவர்கள், கடிதம் அல்லது தொலை பேசி அழைப்பு உள்ளிட்ட எந்தவொரு வழிகளிலும் அரசாங்க செயற்பாடுகள் தொடர்பில் ஆணைகள் வழங்கக்கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சார்பில் பிரதமரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள் மாத்திரமே அவ்வாறான கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்புகளை விடுக்க முடியும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிப்பதுடன், இவ்வாறான செயற்பாடுகள் முன்னதாக இடம்பெற்றிருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் பிரதமரிடம் வழங்கி வைப்பு!
இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும் - உலக இந்துக் குழு இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான பிரேரணை அமைச்சர...