வடமாகாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவுறுத்தல்!
Thursday, December 17th, 2020
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் வீதியோரம் அல்லது நடமாடும் விற்பனையை மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.
Related posts:
மக்களின் வறுமையை விலைபேசும் கூட்டம் நாமல்ல - ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர்...
கல்வியங்காட்டில் வாள்வெட்டு : மூவர் வைத்தியசாலையில்!
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் அடுத்தவாரம் கைச்சாத்து - லிட்ரோ நிறுவனம் அறி...
|
|
|


