கொரோனா : இலங்கையில் 4வது நபர் மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில், 962,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையிலும், 151 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
25 நிர்வாக மாவட்டங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினரிடம் - வெளியானது வர்த்தமானி!
தொற்றாளர்கள் அதிகரித்தால் பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எ...
இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!
|
|